அமெரிக்காவில் மசகு எண்ணெயின் விலையில் பாரிய சரிவு

Report Print Ajith Ajith in அமெரிக்கா

அமெரிக்காவில் மசகு எண்ணெயின் விலையில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பீப்பாய் ஒன்று 15 டொலர் என்ற அடிப்படையில் மசகு எண்ணெயின் விலை இன்று குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த தசாப்தத்தில் ஏற்பட்ட பாரிய விலை வீழ்ச்சி என்று கருதப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக களஞ்சியங்களில் இருப்புகள் நிரம்பிய நிலையிலேயே இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து தடைகளால் கேள்வியில் வீழ்ச்சி ஏற்பட்டமை காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்கனவே எண்ணெய் சந்தையில் பாரிய விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.