அமெரிக்காவில் கொரோனாவின் கோரத்தாண்டவம்! இன்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலி

Report Print Murali Murali in அமெரிக்கா

கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளுக்கு இருக்கும் ஒரே பெரிய சவால். சுமார் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இதனால் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் இன்று மட்டும் (தற்போதுவரை) 2 ஆயிரத்து 168 பேர் உயிரிழந்தனர்.

இதனால் கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47,486 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2,631,452 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 1,730,846 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 716,811 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 183,795 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை நிலைகுலைய செய்துள்ளது. உலக அளவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலி எண்ணிக்கையிலும் அந்நாடு முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 845,936 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இன்று தற்போது வரை புதிதாக 27,192 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று மட்டும் ( தற்போதுவரை) 2168 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 47,486 ஆக அதிகரித்துள்ளது.