3 ரில்லியன் நிதி திரட்டவுள்ள அமெரிக்கா

Report Print Ajith Ajith in அமெரிக்கா

நிதி முடக்கத்தை அடுத்து அமெரிக்கா 2020இன் இரண்டாவது காலாண்டுக்காக 3 ரில்லியன் டொலர்கள் நிதியை திரட்டவுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக வழங்கப்பட்ட நிவாரணங்களை அடுத்து அரச நிதியில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை அடுத்தே இந்த நிதித்திரட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

2008இல் ஏற்பட்ட நிதிப்பிரச்சினையின்போது 1.28 டொலர் நிதியே திரட்டப்பட்டது. எனினும் தற்போது திரட்டப்படவுள்ள நிதியின் தொகை 2018ஆம்ஆண்டைக்காட்டிலும் 5 மடங்கு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நிவாரணங்களுக்காக 3 ரில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டதன் பின்னர் அமெரிக்காவின் கடன் தற்போது 25ரில்லியன் டொலர்களாகும்.

இந்தநிலையில் அரசாங்கத்தின் முறிகளை விற்பனை செய்தே நிதியை திரட்டுவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.