கொரோனா பரவல் இரட்டை கோபுர தாக்குதல்களை விட மோசமானது! ட்ரம்ப் அதிருப்தி

Report Print Ajith Ajith in அமெரிக்கா

கொரோனா பரவல் என்பது மோசமான தாக்குதல் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த கொரோனா பரவல் இரண்டாம் உலகப்போரில் பேர்ல் துறைமுகத்தின் மீது ஜப்பானிய குண்டுத்தாக்குதல் அல்லது இரட்டை கோபுர தாக்குதல்களை விட மோசமானது என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது அவர் சீனாவை நோக்கி சுமத்தும் குற்றச்சாட்டு என்று பிபிசி தெரிவிக்கிறது. இந்த கொரோனா பரவல் சீனாவினால் ஆரம்பத்திலேயே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

எனினும் அதனை சீனா சரியாக மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த கொரோனா பரவல் சீனாவைக்காட்டிலும் அமெரிக்காவின் எதிரி என்று குறிப்பிட்டார்.

கொரோனாவை அமெரிக்காவுக்குள் கொண்டு வந்தமையானது, கண்ணுக்கு தெரியாத எதிரியின் தாக்குதலை போன்ற செயலாகும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

இதேவேளை சீனாவின் சில முடிவுகள் அமெரிக்கர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருப்பதால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரக்தியாகும் என்று அமெரிக்க ஜனாதிபதியின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்