ஒருநாளில் 2500ஐ கடந்த அமெரிக்க கொரோனா உயிரிழப்புக்கள் - காரணம் இவர்கள் தான்...!

Report Print Tamilini in அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் அங்கு வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 800ஐ தாண்டியது.

கொரோனா வைரஸ் அமெரிக்காவையே அதிகமாக புரட்டி எடுத்து வருகிறது. உலக அளவில் வைரசால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா தாக்குதலுக்கு அந்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 800-ஐ கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 12 லட்சத்து 63 ஆயிரத்து 183 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய கொரோனா புள்ளிவிபர வெளீயீட்டின்படி 2528 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் நாளாந்தம் சுமார் 2000க்கு மேர்பட்டோர் உயிரிழந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக 2000க்கும் குறைவான உயிரிழப்புக்களையே பதிவிட்டது அமெரிக்கா. எனவே கொரோனாவின் தாக்க வீரியம் குறைந்து வருகின்றது என உலகளவில் அனைவரும் நினைத்திருந்த வேளையில் கடந்த இரு நாட்களாக அமெரிக்க உயிரிழப்புக்கள் மீண்டும் 2350, 2528 என அதிகரித்திருப்பது மீண்டும் நிலைகுலைய வைத்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் அதிக உயிரிழப்புக்கு காரணம் அங்கு வாழும் அமெரிக்க கறுப்பினத்தவர்கள் தான் என தெரியவந்துள்ளது.

அமெரிக்க மக்கள் தொகையில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் எனப்படும் கறுப்பின அமெரிக்கர்கள் 13 சதவீதம் பேர் உள்ளனர்.

கறுப்பின அமெரிக்கர்கள் வாழும் பகுதிகளிலேயே அதிக அளவு கொரோனா பாதிப்பு இருப்பது, அமெரிக்காவின் 4 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்நாட்டில் உள்ள 3 ஆயிரத்து 100 பகுதிகளை ஒப்பிடுகையில், கறுப்பின அமெரிக்கர்கள் அதிக அளவு வாழும் பகுதிகளில் 52 சதவீத நோய் தாக்கமும், 58 சதவீத உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிற பகுதிகளை ஒப்பிடும் போது கருப்பின அமெரிக்கர்கள் அதிகளவு வாழும் பகுதிகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை 50 சதவீதம் கூடுதலாக உள்ளது.

கொரோனா வைரஸால் அதிக அளவு கறுப்பின அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவதற்கு அவர்களின் உடல்நிலை காரணம் அல்ல என்றும், மாறாக சமூக நிலை உள்ளிட்டவையே காரணமாக உள்ளதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உண்மையில் கொரோனா, ஆபிரிக்க, ஆசிய நாட்டவர்கள் உட்பட சிறுபான்மை இனத்தவர்களைத்தான் அதிகம் தாக்குகின்றது என பிரித்தானிய ஆய்வுகள் அடிக்கடி தெரிவித்திருந்தன.

மேலும், உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டியுள்ளது.

வைரஸ் பரவி சிகிச்சை பெறுபவர்களில் 48 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது. ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 2 லட்சத்து 65 ஆயிரத்து 084க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You may like this video...