போராட்டங்களை கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்பப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

Report Print Ajith Ajith in அமெரிக்கா

அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் காப்பாற்ற வேண்டியது தமது கடமை. எனவே அமெரிக்கச் சாலைகளில் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்பப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

ஆபிரிக்க அமெரிக்கர் ஒருவர் காவல்துறையினரால் கொல்லப்பட்டமையை கண்டித்து கலவரம், கொள்ளை, தாக்குதல்கள் என்று அமெரிக்காவின் பல நகரங்களிலும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் மாகாண நிர்வாகங்கள் வன்முறையை கட்டுப்படுத்த தவறுமானால் சொத்துக்களை அழிப்பதை நிறுத்தவும், சட்டத்தை மதிக்கும் அமெரிக்கர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ராணுவம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்தத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிக்காக்கோவில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.