அமெரிக்கா - வோசிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் பணிகள் நாளை முதல் இயல்பாக இடம்பெறும் என்று தூதரகம் அறிவித்துள்ளது.
கடந்த 4ஆம் திகதி முதல் இன்று வரை வோசிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் மூப்பட்டிருந்தது.
அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் நான்கு பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமையை அடுத்து வோசிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது.
இந்தநிலையிலேயே அந்த தூதரத்தில் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த ஐந்து பேரை தவிர ஏனைய பணியாளர்கள் அனைவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது கண்டறியப்பட்டதாக தூதரகம் அறிவித்துள்ளது.