கேகாலை பிரதேசத்தில் மண்சரிவு எச்சரிக்கை!

Report Print Kumutha Kumutha in காலநிலை
கேகாலை பிரதேசத்தில் மண்சரிவு எச்சரிக்கை!
51Shares

கேகாலை -அரநாயக்க பிரதேசத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்கள் தொடர்பில் நாளைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கட்டிட ஆய்வு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் கேகாலை மாவட்டத்தில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்கள் தொடர்பில் விரிவான ஆய்வுகளை முன்னெடுத்த தேசிய கட்டிட ஆய்வு நிலையத்தினால் ஆய்வுகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய உயர் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய பிரதேசம்,மத்திய தர பாதிப்புக்கள் ஏற்படும் பிரதேசங்கள் தொடர்பாகவும் முழுமையான அறிக்கைகளை சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையானது நாளைய தினம் இடம்பெறவுள்ள கேகாலை மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments