திடீர் மழையால் வெள்ள நீரில் மூழ்கியுள்ள பிரித்தானியா

Report Print Murali Murali in காலநிலை
251Shares

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள திடீர் தொடர்மழையின் காரணமாக பல இடங்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பாகங்கள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ரயில் நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் வெள்ள நீர் புகுந்துள்ள அதேவேளை, பல இடங்களில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையான மின்னல் காரணமாக வீடுகள் மற்றும் தேவாலயம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, மத்திய லண்டனின் யூஸ்ரனுக்கும் இடையேயான ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரதான அதிவேக பாதைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதுடன், ரயில் சேவைகள் பலவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Comments