காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Sujitha Sri in காலநிலை
220Shares

நாட்டின் பல்வேறு பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து மன்னார், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படும் என கூறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய மணிக்கு 55 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் கடல் பிரதேசங்களில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments