ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடும் குளிரான காலநிலையால் அந்த நாடுகளின் நாளாந்த வேலை ஸ்தம்பிதம்

Report Print Karan in காலநிலை
205Shares

ஐரோப்பிய நாடுகளுக்கு குளிர் காலநிலை புதிதல்ல, இருந்தாலும் இம்முறை நிலவி வரும் குளிரான காலநிலை வழமைக்கு மாறானது.

மிகக் குளிரானது தாங்கிக்கொள்ள முடியாதது. வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலைதான் பலருக்கு. இதனால் சில இடங்களில் பனி மூட்டம் ஏற்பட்டுள்ளது.

பனிக்கட்டிகள் விழுகின்றன, சாலைகளில் வாகனங்கள் பயணிப்பதில் சிரமம், சில நாடுகளில் வாகனப் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இந்த மோசமான காலநிலை காரணமாக 20 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மிகக் குளிரான காலநிலை காரணமாக போலந்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கி மற்றும் பல்கேரிய எல்லைப் புறத்தில் 3 சட்ட விரோதக் குடியேற்றவாசிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

மேலும் 2 ஈராக்கியர்கள் மற்றும் ஒரு சோமாலிய பிரஜை ஆகியோரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தாலி, செக் குடியரசு, ரஷ்யர மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளிலும் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

இத்தாலியின் தென் பகுதி விமானச் சேவைகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் சில நாடுகளின் விமான சேவைகள் முற்றாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

பல கப்பல் சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. துருக்கி தனது கப்பல் சேவைகளை இடை நிறுத்தியுள்ளது. இவை அந்த நாட்களின் நாளாந்த நடவடிக்கைகளை மட்டுமல்ல பொருளாதார வளர்ச்சியையும் பாதித்துள்ளது. இந்த படத்தில் யுக்ரேனில் ஏற்பட்ட பனி மூட்ட சேதத்தை காணலாம்.

கிரேக்க தீவுகளின் லெஸ்பொஸ் தீவில் உள்ள நிலை கீழே காட்டப்பட்டுள்ளது.

மேலும் கிரேக்க தீவுகளின் கப்பல் சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. கிரேக்க தீவுகளின் பெரும் பகுதி பனி மூட்டத்தால் மூடப்பட்டுள்ளது.

சேர்பியாவின் டனுபி பிரதேசத்தில் அனைத்து ஆற்று படகு சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் அண்மைக் காலமாக காலை வேளையில் அசாதாரண குளிர் காலநிலை நிலவுகிறது. தண்ணீர் குளிராகவும் காணப்படுகிறது.

இந்த நிலை பகல் வரை நீடிக்கிறது என்பதே புதுமை. வெளியில் வெயில் காணப்பட்டாலும் குளிரான தண்ணீரை உணர முடிகிறது. சாதாரணமாக ஜனவரி மாதத்தில் இவ்வாறான காலநிலை நிலவுவது அபூர்வம். எனவே இலங்கையிலும் ஐரோப்பிய காலநிலை பரவத் தொடங்கியுள்ளது என்பதை உணர முடிகிறது.

Comments