நாடெங்கிலும் குளிரான மற்றும் வறட்சியான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் சீரான காலநிலை நிலவுவதோடு இரத்மலானை மற்றும் கட்டுநாயக்கா பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றும் நுவரெலியாவில் குளிரான காலநிலை நிலவுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்கள்,
அம்பாறை - மிதமான காலநிலை
அனுராதபுரம் - மிதமான காலநிலை
பதுளை - மிதமான காலநிலை
மட்டக்களப்பு - மிதமான காலநிலை
கொழும்பு - மிதமான காலநிலை
காலி - மிதமான காலநிலை
கம்பஹா - மிதமான காலநிலை
அம்பாந்தோட்டை - மிதமான காலநிலை
யாழ்ப்பாணம் - மிதமான காலநிலை
களுத்துறை - மிதமான காலநிலை
கண்டி - மிதமான காலநிலை
கேகாலை - மிதமான காலநிலை
கிளிநொச்சி - மிதமான காலநிலை
குருணாகல் - மிதமான காலநிலை
மன்னார்- மிதமான காலநிலை
மாத்தளை - மிதமான காலநிலை
மாத்தறை - மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை
மொனராகலை - மிதமான காலநிலை
முல்லைத்தீவு - மிதமான காலநிலை
நுவரெலியா - மிதமான காலநிலை
பொலன்னறுவை - மிதமான காலநிலை
புத்தளம் - மிதமான காலநிலை
இரத்தினபுரி - மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை
திருகோணமலை - மிதமான காலநிலை
வவுனியா - மிதமான காலநிலை
நாட்டில் தற்போது நிலவி வரும் குளிருடன் கூடிய காலநிலை இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் நாடு முழுவதும் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்ப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். பிரேமலால் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நாட்டில் காணப்படும் கடும் குளிருடன் கூடிய காலநிலை காரணமாக சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் குளிருக்கு ஈடுகொடுக்கும் வகையில் தயாராக வருமாறு சிவனொளிபாத மலையின் பொறுப்பாளரான தொரப்பனே சுமணஜோதி தேரர் குறிப்பிட்டுள்ளார்.