வரட்சியான காலநிலையால் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு

Report Print Ajith Ajith in காலநிலை

வரட்சியான காலநிலை காரணமாக நாடுமுழுவதும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை 9 மாவட்டங்களுக்கு தாக்கம் செலுத்துவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடுமுழுவதுமுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமானது குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையகத்தில் நீர் உற்பத்தியாகும் பகுதிகளில் நீர் மட்டம் குறைந்துள்ளதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் தாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரை சிக்கனமாக பயன்படுத்தவும்: பொதுமக்களிடம் கோரிக்கை

வரட்சிக் காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தலைவர் கே.ஏ.அன்சார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

வாகனங்களைக் கழுவுதல் வீட்டுத் தோட்டம் விலங்குகளை குளிப்பாட்டுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு மாற்று நடவடிக்கைகளைப் பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது நிலவும் வரட்சியுடனான காலநிலையை எதிர்கொள்வதற்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை திட்டம் வகுத்துள்ளது.

கண்டி பொலன்னறுவை ஹம்பாந்தோட்டை அம்பாறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே கடும் வரட்சிக் காலநிலை நிலவுகின்றது.

இந்த மாவட்டங்களில் நீரை விநியோகிப்பதற்கு முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தலைவர் கே.ஏ.அன்சார் தெரிவித்துள்ளார்.

Comments