மத்திய மலைநாட்டின் நீர்தேக்கங்கள் வற்ற ஆரம்பித்துள்ளன

Report Print Steephen Steephen in காலநிலை
56Shares

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள பிரதான நீர்தேக்கங்களின் நீர் மட்டம் குறிப்பிடத்தக்களவில் குறைந்துள்ளது.

அதன்படி, விக்டோரியா நீர்தேக்கத்தின் நீர்மட்டம் 26.7 வீதமாக குறைந்துள்ளது. கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் 38.8 வீதமாக குறைந்துள்ளது.

மேலும் ரந்தனிகலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் 42 வீதமாக குறைந்துள்ளது. போவதென்னை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் 39 வீதமாக குறைந்துள்ளது.

பிரதேசத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக காசல்ரி, மவுசாகலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டமானது 50 மற்றும் 36 வீதமாக குறைந்துள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இவற்றை தவிர வலவ நீர்த்தேக்கத்தை போஷிக்கும் சமனோலவெவ மற்றும் உடவலவ நீர்தேக்கம் ஆகியவற்றின் நீர்மட்டமும் குறைந்துள்ளதாக அதிகாரசபை கூறியுள்ளது.

Comments