நாளை முதல் மழை

Report Print Samy in காலநிலை
684Shares

நாளை (20) முதல் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பாரிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவாக மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காலை வேளையில், குளிராக காணப்படும் என்பதோடு, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மாகாணங்களில் பனிபடர்ந்த நிலை காணப்படும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Comments