கிழக்கில் தொடரும் மழை! மட்டக்களப்பில் அதிக மழை வீழ்ச்சி பதிவு

Report Print Kumar in காலநிலை

கிழக்கு மாகாணத்தில் இன்று காலை 08.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சியின் அளவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்தார்.

அதிகளவான மழை வீழ்ச்சி உறுகாமம் நீர்பாசனப்பகுதியில் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ள அதேவேளை தாழ்நிலப்பகுதிகள் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் நேற்று முதல் கடும் மழை பெய்துவருவதன் காரணமாக மக்களின் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம்:

மட்டக்களப்பு நகர் 61.7மிமி, மைலம்பாவெளி 37.0மிமி, பாசிக்குடா 37.6மிமி, உறுகாமம் 87.5மிமி, உன்னிச்சை 71.0மிமி, வாகனேரி 64.8மிமி, தும்பன்கேணி 23.0மிமி, நவகிரி 16.0மிமி.

அம்பாறை மாவட்டம்:

அம்பாறை நீர்த்தேக்கம் 13.2மிமி, இக்கினியாகல 11.0மிமி, எக்கல 11.0மிமி, அட்டாளச்சேனை 8.5மிமி, பதியத்தலாவ 24.7மிமி, அக்கரைப்பற்று 9.2மிமி, இலுக்குச்சேனை 83.3மிமி, தீகவாவி 5.0மிமி, சாகமம் 6.4மிமி, மகாஓய 27.5மிமி.

திருகோணமலை மாவட்டம்:

புல்மோட்டை 4.7மிமி, மொறவெள 65.0மிமி. என்ற அடிப்படையில் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments