லிந்துலையில் மினி சூறாவளி : பாராளுமன்ற உறுப்பினரின் வீடும் பாதிப்பு

Report Print Nivetha in காலநிலை
44Shares

லிந்துலை, கெளலினா மற்றும் ஹென்போல்ட் ஆகிய பகுதிகளில், சற்று முன் வீசிய மினிசூறாவளியினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

சூறாவளியினால் 33 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பாதிப்படைந்த வீடுகளில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வீடும் அடங்குவதாக லிந்துலை பொலிஸார் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150ற்கும் மேற்பட்டோர்களுக்கு நிவாரணங்களை வழங்க பிரதேச செயலகம், தோட்டநிர்வாகம், மற்றும் பொதுமக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேவேளை, 15 இற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும், இதனால் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

படங்கள் இணைப்பு - திருமால்

Comments