இலங்கையில் நிலவும் காலநிலையில் இன்று முதல் மாற்றம்

Report Print Vethu Vethu in காலநிலை

இலங்கையின் வான்பரப்பில் நிலவும் காலநிலையில் இன்று முதல் கடும் காற்று மற்றும் மழை குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாட்டின் ஊடாக மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வாளர் நதீகா ரணவீர தெரிவித்துள்ளார்.

இதேவேனை, அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 196 வரை அதிகரித்துள்ளது. 93 பேரை காணவில்லை.

இன்று வரையில் 622510 பேர் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.