காலியில் மண்சரிவு அபாயம்: மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

Report Print Aasim in காலநிலை

காலி மாவட்டத்தின் கொதேகொட மலையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கொதேகொட மலைப்பிரதேசத்தில் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து இன்று (31) நண்பகல் தொடக்கம் குறித்த பிரதேசத்தில் வசித்த பொதுமக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற்றுவதில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கொதேகொட மலைப்பிரதேசத்தில் வசித்த 94 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் இவ்வாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளினால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்கள் பிரதேசத்தில் இருக்கும் விகாரை உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காலி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாயத்தை மேலும் 24 மணிநேரங்களுக்கு நீடித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் கொதேகொட மலைப்பகுதியில் மண்சரிவு தொடர்பான அறிகுறிகள் தென்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.