அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றின் வேகம் அதிகரிக்கும்? மக்களுக்கு எச்சரிக்கை!

Report Print Samy in காலநிலை

அடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்கு, காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதால், கரையோரப் பிரேதசங்களில் வாழும் மக்களும் மீனவர்களும், அவதானத்துடன் செயற்படுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தொடை ஊடாக பொத்துவில் வரையும் மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரப் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என, திணைக்களம் தெரிவித்துள்ளது.

அ​தேபோல், நாட்டின் ஏனைய கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை வீசக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You may like this video