அனர்த்தத்தினால் காவு கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது! அச்சத்தில் உறவினர்கள்

Report Print Rakesh in காலநிலை

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக விடுத்துள்ள அறிக்கையின் பிரகாரம் வெள்ளம் மற்றும் மண்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 203ஆக அதிகரித்துள்ளது.

ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 264 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 31 ஆயிரத்து 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 96 பேர் காணாமல்போயுள்ளனர். ஆயிரத்து 508 வீடுகள் முழுமையாகவும், 7 ஆயிரத்து 617 வீடகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 368 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் சேத விபரங்கள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.