எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

Report Print Samy in காலநிலை

நாடளாவிய ரீதியில் பதிவாகும் மழை வீழ்ச்சியின் அளவில் எதிர்வரும் நாட்களில் அதிகரிப்பை காணமுடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மாகாணம், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலேயே மழைவீழ்ச்சி அதிகமாக பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல் உள்ளிட்ட பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என அறியப்பட்டுள்ளது.

அதேபோல் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் உவா, வடமத்திய மாகாணம், வவுனியா ஆகிய இடங்களுக்கும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி மாலை வேலையில் பதிவாகும் என காலநிலை அவதான நிலையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.