புவி வெப்பமடைவதால் இலங்கைக்கு ஆபத்து

Report Print Vethu Vethu in காலநிலை

புவி வெப்பமடைதல் அதிகரிப்பதன் காரணமாக தெற்காசிய நாடுகளில் சுகாதார ரீதியில் அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஆய்விற்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உட்பட தெற்காசிய நாடுகளின் வெப்பம் நூற்றுக்கு 35 செல்சியஸ் பாகை வரை அதிகரிக்க கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறித்த நிலைமைய கட்டுப்படுத்துவதற்கு வளிமண்டலத்தில் கார்பன் சேர்வதனை குறைத்துக் கொள்ள வேண்டும் என இந்த ஆய்வினை மேற்கொண்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.