மூடுபனியால் மூழ்கியுள்ள மலையகம்! வீதிகளில் காத்திருக்கும் ஆபத்து

Report Print Vethu Vethu in காலநிலை

மத்திய மலைநாட்டு பிரதேசங்களில் இன்று காலை முதல் அதிக மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மழையை தொடர்ந்து பல பிரதேசங்களில் அதிக மூடுபனி காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்று காலை ஹற்றன் - நுவரெலியா பிரதான வீதியிலும், ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியிலும் மூடுபனி காலநிலை காணப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாகன போக்குவரத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பெய்யும் அதிக மழையை தொடர்ந்து மலையக வீதிகளில் வழுக்கும் தன்மை ஏற்பட்டுள்ளதாகவும், போக்குவரத்தில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுமாறு பொலிஸார், சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று மற்றும் நாளை நாட்டின் தென்மேற்குப் பகுதிகள் மழை நிலைமையில் அதிகரிப்பொன்றை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய மேல், சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களிலும், கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு சூரியன் நேராக பயணிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று நாவலடி, பெரியபரந்தன் பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் என திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.