வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! இன்றும் கடும் மழை பெய்யும்!

Report Print Samy in காலநிலை

இலங்கைக்கு வங்காள விரிகுடா பகுதியில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்குக்கு அதிகூடிய மழை வீழ்ச்சி ஏற்படும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

குறிப்பாக இன்று 5ஆம் திகதி வரை தொடர்ந்தும் வடக்குக்கு அதிகூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

அதேவேளை, திருகோணமலை, களுத்துறை உள்ளிட்ட இடங்களிலும்> வடமத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும் தொடர்ச்சியாக இன்றும் மழை பெய்யும் என்றும் அவதான நிலையம் தெரிவிக்கிறது.