இலங்கையின் தென் பகுதி கடலில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!

Report Print Vethu Vethu in காலநிலை

இலங்கையின் தென் பகுதி கடலில் திடீரென ஏற்பட்ட மாற்றம் காரணமாக மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை குருபொக்குன, கொட்டவராய கடலுக்கு அருகில் சுறாவளி புயல்கள் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அச்சமடைந்த மீனவர்கள் கரையை அடைந்ததுடன், உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பெய்யும் அதிக மழையை தொடர்ந்து ஹுங்கம் குருபொக்குண கொட்டவராய மாதெல்ல கடல் பகுதியில் இந்த சுறாவளி தன்மை ஏற்பட்டுள்ளது.

கடலுக்குள் இரண்டு சுறாவளிகள் ஒரே நேரத்தில் தோன்றியதாகவும், 15 நிமிடங்கள் வரை நீடிதத்ததனை அவதானிக்க முடிந்ததாகவும், மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமைக்கு மாறாக இரு சுழல்காற்று உருவானதால், மீனவர்கள் மத்தியில் அச்ச உணர்வு காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.