நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

Report Print Gokulan Gokulan in காலநிலை

இலங்கையின் தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள வளிமண்டலக் குழப்பத்தினால் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில். வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றும், நாளையும் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதாவது,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் சற்றுப்பலமான காற்று வீசக்கூடும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.

மேற்கு, வடமேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சிலபகுதிகளில் அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படும். இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்று பலமாக வீசும்.

எனவே பொது மக்கள் இந்த இடி, மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.