நுவரெலியாவாக காட்சியளித்த வன்னி! மக்களுக்கு கிடைத்த புதிய அனுபவம்

Report Print Vethu Vethu in காலநிலை

இலங்கையில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், வன்னி மாவட்ட மக்கள் மாறுபட்ட நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வன்னி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சூரியன் உதித்த பின்னரும் பனியினால் மூடப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

வன்னியில் தொடர்ந்து பெய்த மழையின் பின்னர் நேற்று இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வன்னியில் வீதிகள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் காணப்பட்டதாகவும், இதனால் போக்குவரத்து மேற்கொள்வதற்கு சிரமமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான காலநிலையை வன்னி மக்கள் பார்ப்பதென்பது மிக அரிய விடயமாகும்.

அதிக குளிருடன் பனி மூட்டம் ஏற்படும் காலநிலை நுவரெலியாவில் நிலவும் நிலையில், நேற்று காலை அதே நிலை வன்னியில் உணரப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மைக்காலமாக நுவரெலியாவில் வழமையை விடவும் அதிகளவான குளிரான காலநிலை காணப்படுகிறது. இதன் காரணமாக அங்குள்ள மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.