மட்டக்களப்பு கடலில் வெளிப்பட்ட பெருந்தொகை பாம்புகளால் ஆபத்தா? நாரா நிறுவனம் விளக்கம்

Report Print Vethu Vethu in காலநிலை
1275Shares

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய பாம்பு மீன்கள் குறித்து அச்சம் வெளியிடப்பட்டது.

சுனாமி பேரனர்த்தம் ஏற்படுவதற்கான அறிகுறியாக பாம்பு மீன்களின் வருகை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும் அதில் எவ்வித உண்மையும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சுனாமி ஆபத்து ஏற்படும் என்பது தொடர்பில் இதுவரையில் எந்த ஒரு அடையாளமும் தென்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மட்டக்களப்பு கடலில் பாம்பு மீன்கள் சிக்கியிருப்பதனால் சுனாமி ஆபத்துக்கள் ஒன்றும் இல்லை என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு உட்பட கடற்கரை பிரதேசங்கள் சிலவற்றில் இந்த பாம்புகள் சிக்கியுள்ளதனை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தன.

கடல் நீரில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இவ்வாறான பாம்புகள் சிக்கியுள்ளதாக நாரா நிறுவனத்தின் தலைவர் அனில் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்ற காரணத்தினால் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருக்கலாம். வடகிழக்கு பருவமழையின் போது கடல் நீரில் பாரிய மாற்றங்கள் ஏற்படும்.

கடந்த நாட்களில் பெய்த மழையின் காரணமாக ஏனைய நாட்களை விடவும் அதிக சுத்தமான நீர் இந்த பிரதேசத்தில் இணைகின்றது. அதன் போது அமிலத்தன்மை குறைவடைந்தது. அந்த நிலைமை சில நேரங்களில் உயிரினங்களுக்கு ஒத்துப்போகாது.

இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் முடிந்தளவு விரைவாக வேறு இடத்திற்கு பயணிக்கும். அது போன்ற சந்தர்ப்பத்தில் தான் இவ்வாறான விடயங்கள் ஏற்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.