கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மீனவர்களுக்கு அவசர அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வுகூறியுள்ளதால் நாளை மற்றும் நாளை மறுதினம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.
அத்துடன் பொது மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அறிவித்தல் விடுத்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் மூன்று நாட்களில் தாழமுக்கம் மேல் திசையை நோக்கி பயணித்து வங்காள விரிகுடா கடல் பிரதேசம் ஊடாக இந்தியாவை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் இலங்கைக்கு நாளை பாதிப்பு ஏற்படும் எனவும், இது தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்படுமாறும் பொது மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
தாழமுக்கம் தொடர்பில் எதுவித மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக அறிவிக்கப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.