வடக்கு, கிழக்கில் தயார் நிலையில் இருக்கும் முப்படையினர்!

Report Print Nivetha in காலநிலை

வடக்கு மற்றும் கிழக்கில் அசாதாரண நிலையை எதிர்வு கொள்ளக்கூடிய தயார் நிலையில் எப்போதும் முப்படையினர் இருப்பதாக இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நிலவி வரும் சீரற்ற காலநிலை தொடர்பான முன்னேற்பாடுகள் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுவரையும் சீரற்ற காலநிலையினால் எந்தவித அனர்த்த நிலையும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்டிருந்த குறைந்த தாழமுக்கமானது இலங்கையை விட்டு நகர்ந்துச் செல்ல ஆரம்பித்திருப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறைந்த தாழமுக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படவிருந்த தாக்கங்கள் குறைவடைய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், அனர்த்தம் தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும், எனினும், பொதுமக்கள், மீனவர்களை அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.