வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை இலங்கையில் அடுத்த வாரம் ஆரம்பம்!

Report Print Samy in காலநிலை

வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை அடுத்த வாரம் இலங்கையில் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட கீழ் பருவப் பெயர்ச்சி மழைக்குத் தேவையான சூழ்நிலைகள் அவதானிக்கப்பட்டு வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இன்று அல்லது நாளை இதற்கான சூழல் தாக்கமடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள குளங்கள் வட கீழ் பருவப் பெயர்ச்சி மழையின் மூலமே நீரைப் பெறுவது வழமை என தெரிவிக்கப்படுகிறது.