இலங்கையின் பல பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் சாத்தியம்

Report Print Sujitha Sri in காலநிலை
180Shares

இலங்கையின் மொனராகலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், சில கடற்கரை பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும்,

மொனராகலை, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுகிறது.

அத்துடன், காங்கேசன்துறையில் இருந்து புத்தளம் வழியாக கொழும்பு வரையிலும், காலியிலிருந்து மாத்தறை வழியாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதியில் மணித்தியாலத்திற்கு 55 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்ளிலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்வதற்காக சாத்தியமும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.