இலங்கையின் சில கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும்

Report Print Sujitha Sri in காலநிலை

மன்னாரில் இருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக பலபிட்டி வரையிலான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற் பகுதிகளில் காற்றின் வேகமானது அதிகரித்து வீசுவதுடன் இதன்போது அந்த கடற் பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பொத்துவிலில் இருந்து அம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையிலான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற் பகுதிகளிலும் காற்றின் வேகமானது சற்று அதிகரித்து வீசுவதுடன் அப்போது அக்கடற் பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை காலியில் இருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டைச் சூழவுள்ள கடற் பகுதிகளில் காற்றானது மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வீசும் எனவும், அதிகமான மாகாணங்களில் பிற்பகல் 2.௦௦ மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.