மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு இருளில் மூழ்கும் அபாயம்?

Report Print Samy in காலநிலை

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடளாவிய ரீதியில் மின் வினியோகத்தில் அவ்வப்போது தடை ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நீரேந்துப் பகுதிகளில் குறித்த காலப் பகுதியில் கடும் வறட்சி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுவதே இதற்குக் காரணம் என்றும் மின்சார சபை விளக்கமளித்துள்ளது.

இக்காலப்பகுதிகளில் மின் தட்டுப்பாட்டைத் தடுக்க உதவியாக மின்சாரத்தை மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என, மின்சாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளைத் தவிர இதர விழாக்களைில் மின்சார அலங்காரங்களை தவிர்த்து ஒத்துழைக்குமாறு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சனா ஜயவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.