காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை!!

Report Print Vethu Vethu in காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதனால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நாட்டின் கிழக்கு கடல் பகுதியில் காணப்படுகின்ற மேக மூட்டத்துடனான காலநிலை காரணமாக காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையிலான அழமான மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மணிக்கு 70 - 80 கிலோ மீற்றர் வேகத்திற்கு அதிகமாக காற்று வீசுவதற்கு வாய்ப்புகள் உள்ளமையினால் கடல் பிரதேசங்களின் கொந்தளிப்பு நிலைமை அதிகமாக காணப்படும்.

இதன் காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.