இலங்கையில் உறைபனி பொழியும் சாத்தியம்

Report Print Sujitha Sri in காலநிலை

நாட்டின் சில பிரதேசங்களில் எதிர்வரும் தினங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுவதாகவும், நுவரெலியா மாவட்டத்தில் உறைபனி பொழியக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை நிலவும் எனவும் வளிமண்டவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் காலி மாவட்டத்தின் சில இடங்களில் மாலை இரண்டு மணிக்குப் பின்பு இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் கேகாலை மாவட்டங்களில் அவ்வப்போது ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers