காலநிலை மாற்றம் தொடர்பில் மக்களுக்கு அறிவிப்பு

Report Print Aasim in காலநிலை

எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பின்னர் இலங்கையின் காலநிலையில் சிறு மாற்றம் ஏற்படலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது கடும் கோடை காரணமாக உச்சபட்ச வெப்ப நிலை நிலவும் காலநிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமையின் பின்னர் ஆங்காங்கே மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

அதே போன்று வியாழக்கிழமையின் பின்னர் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் சாரல் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், தற்போதைக்கு அதிகாலை மற்றும் இரவுவேளைகளில் நிலவும் கடுங்குளிர் நிலைமை தொடர்ந்தும் நீடிக்கும் என்றே வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.