வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Report Print Murali Murali in காலநிலை
241Shares

நாட்டின் கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 50 முதல் 75 மில்லிமீற்றர் அளவான மழைவீழ்ச்சி பெய்யக்கூடும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற் பகுதிகளில் சீரான வானிலை நிலவும். நாட்டின் வடபகுதியின் சில பகுதிகளிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்றுவீசக்கூடும் இடிமின்னலிலிருந்து ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.