நீண்ட நாட்களுக்குப் பின் மட்டக்களப்பில் மழை

Report Print Rusath in காலநிலை
116Shares

மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களுக்குப் பின் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

அண்மைக் காலமாக அதிக வெயிலுடன் கூடிய காலநிலை நிலவிவந்த நிலையில் நேற்று மாலை வேளையிலிருந்து மழை பெய்து வருகின்றது.

வருடாந்தம் டிசம்பர், மற்றும் தை மாதங்களில் பெய்யும் மழை விழ்ச்சி இவ்வருடம் குறைவடைந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான சிறுபோக வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்டிருந்தது.

இதனால் மாவட்டத்தின் பெரும்பானால இடங்களில் அதிக வறட்சியும் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை வேளையில் இருந்து மாவட்டத்தின் பல இடங்களில் ஓரளவான மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.