எதிர்வரும் நாட்களில் காற்றும் மழையும் கடுமையாக இருக்கக் கூடும் என்பதால் கவனமாக இருந்து கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு அருகேயுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நான்கு மாவட்டங்களில் கடுமையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
திருகோணமலை தொடக்கம் ஹம்பாந்தோட்டை,காலி வரையான கரையோரப் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழையும், அதன்போது கடுமையான காற்றும் வீசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் வானிலை அவதான நிலையத்தின் எச்சரிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் எந்தவொரு நிலைமையையும் எதிர்கொள்ளும் வகையில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் முப்படையினர் தயாராக இருப்பதாகவும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் அறிவித்தல் தெரிவிக்கின்றது.