வவுனியாவில் கடும் மழை! அரச அலுவலகத்தின் மேல் வீழ்ந்த மரம்

Report Print Theesan in காலநிலை

வவுனியாவில் இன்று காலை முதல் பெய்து வந்த மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தின் மேல் பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வவுனியா - கண்டி வீதியிலுள்ள பிரதம பொறியியலாளர் அலுவலகம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வவுனியா அலுவலகத்திலுள்ள பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.

இதனால் அங்கு கடமையில் ஈடுபட்ட எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், அலுவலகத்திற்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.