சுழல் காற்றினால் பிரதேச சபையின் களஞ்சிய அறையின் கூறை முற்றாக சேதம்

Report Print Rusath in காலநிலை

மட்டக்களப்பு - போரதீவுப் பற்று பிரதேச சபை களஞ்சிய அறையின் கூரை நேற்று இரவு வீசிய பலத்த சுழல் காற்றினால் முற்றாகச் சேதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை போரதீவுப் பற்று பிரதேச சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தெரிவிக்கையில்,

ஞாயிற்றுக் கிழமை இரவு முழுவதும் இப்பகுதியில் பலத்த மழையுடன் கூடிய காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

இந்த நிலையில் சுழல் காற்றுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் மேற்படி பிரதே சபையின் களஞ்சிய அறையின் கூரை முற்றாக உடைந்து சேதமாக்கப்பட்டுள்ளது.

இவற்றால் சுமார் 75,000 ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பின் நிலமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் இன்று நேரில் பார்வையிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போரதீவுப்பற்றுப் பிரதேச கலாச்சார மத்திய நிலையமும் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையத்தின் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.