நீரில் மூழ்கியுள்ள மலையகப் பகுதிகள்: சாரதிகளுக்கு எச்சரிக்கை!

Report Print Thirumal Thirumal in காலநிலை

நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக மலையகப் பிரதேசத்தில் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, சில பகுதிகளில் நீரிலும் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, வட்டவளை, மஸ்கெலியா, தலவாக்கலை ஆகிய பகுதிகளில் இன்று பிற்பகல் பெய்த கடும் மழையின் காரணமகா ஹட்டன் நகரப்பகுதிகள் சிலவும் நீரில் மூழ்கியுள்ளன.

ஹட்டன், கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு பகுதியில் நீர் செல்லும் வடிக்கான்கள் மூடியதனால் நீர் வெளியேறி வீதிக்கு செல்வதோடு அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும், ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், வீதி வழுக்கும் தன்மையாக இருப்பதனாலும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.