கடுமையான வெப்பநிலை எதிர்வரும் 25ம் திகதி வரையில் நீடிக்கும்

Report Print Kamel Kamel in காலநிலை

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் 25ம் திகதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில பிரதேசங்களில் தற்பொழுது நிலவி வரும் மழையுடனான காலநிலை மற்றும் சில பிரதேசங்களில் நிலவி வரும் உடலுக்கு உசிதமற்ற வெப்ப நிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஜனக குமார தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் கடுமையான வெப்பநிலை நீடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வறட்சி நிலவி வருவதனால் வெப்பத்துடன் கூடிய காலநிலை நீடித்து வருவதாகவும் ஏனைய பகுதிகளில் வளிமண்டலத்தின் நீர் ஆவியாதல் காரணமாகவும் வெப்பநிலை அதிகரிதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

25ம் திகதியின் பின்னர் மழை பெய்யும் எனவும் அதன் பின்னர் இந்த வெப்பத்துடன் கூடிய காலநிலை குறைவடையும் என அவர் கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.