மலையகத்தில் அடை மழை: வெள்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி நகரம்

Report Print Gokulan Gokulan in காலநிலை

மலையகத்தின் பல பகுதிகளில் இன்றைய தினம் கடும் மழை பெய்து வருகின்ற நிலையில், நாவலப்பிட்டி நகர பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளது.

பெய்து வரும் அடை மழையினால் குறித்த பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன்காரணமாக மாணவர்கள் உள்ளிட்ட நகருக்கு வருகைத்தருவோர் பாதிப்புக்குள்ளாகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நகரின் நீர் வடிகாலமைப்பு முறையாக இல்லாத காரணத்தினாலேயே நகரில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கெடுப்பதாக நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.