மோசமான காலநிலையால் கொழும்பில் நடந்த விபரீதம்

Report Print Murali Murali in காலநிலை

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு 7 - Maitland பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் கார் ஒன்று பலத்த சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், காரின் சாரதி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.