கடலில் 20 அடி உயரத்திற்கு எழும்பும் இராட்சத அலைகள்

Report Print Ashik in காலநிலை

ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பலத்த காற்று வீசுவதன் காரணமாக தனுஸ்கோடி பகுதியில் கடல் அலைகள் சுமார் 20 அடி உயரத்திற்கு எழும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்ல பொலிஸார் தடை விதித்துள்ளதுடன், தனுஸ்கோடி பகுதியில் பலத்த காற்று காரணமாக மணல் புயல் வீசி வருவதால் சாலைகள் அனைத்தும் மணலால் மூடப்பட்டுள்ளன.

இதனையடுத்து அரிச்சல் முனைப்பகுதிக்கு செல்ல வரும் சுற்றுலா பயணிகள் தனுஸ்கோடி பகுதியுடன் தடுத்து நிறுத்தப்பட்டு ராமேஸ்வரத்திற்கு அனுப்பபட்டு வருகின்றனர்.

ஆனால் சுற்றுலா வரும் மக்கள் ஆபத்தை உணராமல் ராட்சத அலைகளுடன் செல்பி எடுத்து கொள்ளவதாகவும், இதிலிருக்கும் அபாய தன்மையை கருத்தில் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் பாம்பன் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் புகையிரதங்கள் அனைத்தும் சிறிது நின்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.