கொழும்பின் பல பகுதிகளிலும் அடைமழை

Report Print Shalini in காலநிலை

கொழும்பின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் அடைமழை பெய்து வருகின்றது. கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலுடன் கூடிய காலநிலை நிலவிவந்தது. எனினும் இன்று காலை முதல் திடீரென மழை பெய்து வருகின்றது.

சாதாரண மழைக்கே கொழும்பின் சில வீதிகள் வெள்ள நீரினால் சூழ்ந்து காணப்படும். ஆனால் இன்று பெய்த அடை மழையில் கொட்டாஞ்சேனை வீதியில் நீர் நிரம்பி இருப்பது குறைவாகவே உள்ளது.

நீர் விரைவாக வடிந்தோடியதை காணக்கூடியதாக இருந்தது. அண்மை நாட்களில் கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வீதி திருத்த வேலைகளினால் இவ்வாறு மழை நீர் நிற்காமல் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு கடற்பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.