ஹட்டன் - டயகம பிரதான வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

Report Print Thirumal Thirumal in காலநிலை

ஹட்டன் டயகம பிரதான வீதியில் போடைஸ் என்.சி பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் கற்கள் சரிந்து வீழ்ந்து வீதி வெடிப்புற்று காணப்படுவதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு இதனை சீர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய மலை நாட்டு பகுதியில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவனால் இவ்வீதியின் பல இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் ஒரு வீதியூடான போக்குவரத்தே காணப்படுகின்றன.

இதேவேளை, மலையகத்தின் பல வீதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதனால் சாரதிகள் தமது வாகனங்களை தமக்குரிய பக்கத்தில் மிகவும் அவதானமாக செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.